Saturday, April 2, 2011

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இன்றியமையாத ஒன்று ஆனால் இன்று கிடைக்காத ஒன்று....

IQ - Intelligence Quotient

20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மனநல நிபுனர்கள் ஒரு மனிதனின் புத்திசாலித்தனத்தை அளக்க சில வழிகளை கண்டுபிடித்தனர். IQ என்பது நாம் தர்க்க ரீதியாக (Logic) ஒரு பிரச்சினையை எப்படி அனுகுகிறோம் என்பதே. அதற்கு ஒரு சில தேர்வு முறைகளை வகுத்தனர் (Aptitude Test, Reasoning போன்றவை). இந்த முறைகள் புத்திசாலித்தனத்தை வைத்து மக்களை வரிசைப்படுத்த முடிந்தது. ஒருவனின் IQ அதிகமாக இருந்தால், அவன் அதிக புத்திசாலி என்று முடிவெடுக்கப்பட்டது.

உதாரணம் : கணினி. இது சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை. அதற்கு கொடுக்கப்பட்ட வேலையை அதன் எல்லைக்குள் தவறு இல்லாமல் செய்து முடிக்கும்.

IQ-வின் ஆராய்ச்சி EQ-வை அறிந்து கொள்ள உதவிற்று.

EQ - Emotional Quotient

EQ என்பது தன்னுடைய அல்லது பிறருடைய மனநலம் மற்றும் உணர்ச்சிகளை புரிந்து கொள்வது. அது ஒருவருடைய சாதுரியம் மற்றும் சாகித்தியசக்தி (Skills) ஆகியவற்றின் தொகுப்பு. இவைகளின் மூலம் ஒருவன் சுற்றுப்புறத்திலிருந்து உருவாகும் அழுத்தங்கள் மற்றும் தேவைகளை எப்படி, எந்த வழியில் வெற்றி கொள்கிறான் என்பதை அறிவதே. 1990-களின் நடுவில் நரம்பியல் நிபுணர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் EQ என்பதும் IQ-க்கு இணையாக முக்கியமானது என்று நிரூபித்தார்கள். அவர்களின் ஆராய்ச்சிகளின் மூலம் ஒருவன் அளவு கடந்த உணர்ச்சி மிகுந்தவனாக இருந்தால் அவன் தனது புத்திசாலித் தனத்தையும், முடிவெடுக்கும் திரணையும் இழக்கிறான் என்று அறிந்தார்கள். இதை தான் தமிழில் "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்றார்கள். மேலும் ஒருவன் IQ-வை சரியாக பயன்படுத்த EQ முக்கியம் என்பதை அறிந்தார்கள்.

உதாரணம் : விலங்குகள். இவை சிந்திக்கும் செயலற்றவை. "ஏன்?" என்று கேள்வி கேட்கத் தெரியாதவை.

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா?

கர்ப்ப காலத்தில், பெண்களின் உடலில், இரத்தம் சாதாரண அளவை விட 50 சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும். அதற்கேற்ப, ஹீமோகுளோபினுக்கு, இரும்பு சத்து தேவைப்படுகிறது. உங்களுக்கும், கர்ப்பப் பையில் இருக்கும் உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கும் இரும்பு சத்து மிகவும் அவசியம். பெரும்பாலான கர்ப்பிணி பெண்கள், கர்ப்ப காலத்தில், இரும்பு சத்து அதிகம் தேவை என்பதை அறிவதில்லை. குறிப்பாக, இரண்டாவது, மூன்றாவது மாதத்தில், தினசரி உண்ணும் உணவின் மூலம் மட்டும், இரும்பு சத்தை பெற முடிவதில்லை. சாதாரணமாக 9 மி.கி., இரும்பு சத்து தேவைப்பட்டால், கர்ப்ப காலத்தில் 27 மில்லி.கி., இரும்பு சத்து தேவைப்படுகிறது.

கர்ப்பிணி பெண்கள், தினசரி உணவில் 30 மி.கி., இரும்பு சத்துள்ள உணவு பொருட்களை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இறைச்சி, கோழி, மீன் முதலியவற்றில் உள்ள இரும்பு சத்து எளிதில் உடலுக்குள் உறிஞ்சப்படுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் அசைவம் உட்கொள்பவர்கள் இவற்றை உண்ணலாம்.

காபி, தேநீர், மதுபானம் போன்றவற்றை, உணவுக்கு இடையே அருந்துவதை நிறுத்த வேண்டும். இவற்றில் கார்பாலிக் அமிலம் உள்ளதால் இவை இரும்பு சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கும். போதுமான இரும்பு சத்து உடலில் இல்லாத போது, உடலின் சக்தி குறைந்து ஹீமோகுளோபின் அளவு குறையும். இதனால், ரத்த சோகை உருவாகி, குறை பிரசவமாகவோ அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையாகவோ பிறக்கிறது. கர்ப்ப காலத்தில் ரத்த சோகை இருந்தால், இரத்தம் செலுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை பிறக்கும் நேரத்தில் அதிக ரத்தம் வெளியேறுவதால், வேறு சில பிரச்னைகளை உருவாகும். கர்ப்பத்தில் இருக்கும் போதே, குழந்தைக்கு இரும்பு சத்து தேவைப்படுகிறது. எனவே கர்ப்ப காலத்தில், தாய்க்கு இரும்பு சத்து குறைபாடு இருந்தால் அது குழந்தையை பாதிக்கும்.இரும்பு சத்து தேவை என்பதற்காக, அதிக அளவில் இரும்பு சத்து உள்ள உணவு பொருட்களையோ, மாத்திரைகளையோ உட்கொண்டால், அது வாயு மண்டலத்தை பாதித்து, மலச்சிக்கல், வாந்தி, குமட்டல், உடல்நலமின்மை, சில நேரம் வயிற்றுப் போக்கு கூட ஏற்படும். இரும்பு சத்துள்ள மாத்திரைகளை உட்கொள்ளும் போது, மலம் கருப்பாக வெளியேறும். இது குறித்து கவலைப்பட வேண்டாம்.

இரும்புச்சத்து குறைபாடு:

உடல் சோர்வு, சக்தி இன்மை, தலை சுற்றல், மயக்கம் முதலியவை அளவிற்கு அதிகமாக இருப்பின் அது ரத்த சோகையின் அறிகுறி. மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள கூடாது. மருத்துவர் கூறும் அளவிற்கு அதிகமாகவும் உட்கொள்ள வேண்டாம். இரும்பு சத்து மாத்திரைகளை நீர், ஆரஞ்சு ஜூஸ் முதலியவற்றுடன் உண்ணலாம். பாலுடன் உண்பதை தவிர்க்கவும்.

உலக சுகாதார மையம் உணவினால் வரும் குறைபாடுகளிலேயே இரும்புச்சத்தின் குறைபாட்டால் வரும் நோய்களே அ திகம் என்று கூறுகிறது. 80% இக்குறைபாட்டால் அவதியுறுவ தாகவும் அதில் 33% இதனால் ஏற்படும் இரத்த சோகையால் தவிப்பதாகவும் கூறுகிறது. முதலில் இரும்பு சத்து நமது தேவையை விட நாம் உட்கொள்ளும் அளவு குறைவாக இருப்பதால் குறைபாடு ஏற்படும். ஆரம்பத்தில் இரத்த சோகையய தவிர்க்க, ஏற்கெனவே இருக்கும் சேமிப்பிலிருந்து இரும்பை உபயோகித்து கொள்ளும். ஆகையால் இரத்த சோகை என்பது மிக அதிகமான இரும்பு குறைபாட்டையே குறிக்கும். இவ்வகை இரத்த சோகை உள்ளவர்கள் ஹீமோகுளோபின் சாதாரண உடல் நல மேன்மை நிலையைவிட மிகவும் குறைவாக இருக்கும்.முதலில் இரும்பு குறைபாட்டால் வரும் இரத்த சோகை என்ன காரணங்களால் ஏற்படுகிறது என்பதை பார்ப்போம். அதிக அளவு இரத்த போக்கு, இரும்பினை சிறுகுடல் உறிஞ்சுவதில் தடை, மாதவிலக்கு காலங்களில் இரத்த போக்கு இவற்றால் இரும்பு அதிக அள வில் வெளியேறி இரத்த சோகை வருகிறது.

சிறுநீரக குறைபாடு இருந்தால், இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய தூண்டும் ஹார்மோனை உற்பத்தி செய்ய முடியாதாகையால், இரும்பு சத்தின் குறைபாட்டால் வரும் இரத்த சோகை ஏற்படும்.

வைட்டமின் A இரும்பு சேமிப்பில் இருந்து மெல்ல திசுக்களுக்கு அனுப்பும் வேலையை செய்கிறது. இதனால் வைட்டமின் A குறைபாடு இருந்தாலும் இரத்த சோகை வரும். இது வளரும் நாடுகளில் அதிகம் காணப்படும்.

மேலும் இந்த இரும்பு சத்தானது, நமது உடலில் உள்ள ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனை மூளைக்குக் எடுத்து செல்லும் மிக முக்கியமான பணியை மேற்கொள்கிறது. இந்த இரும்பு சத்து குறைந்தால் மூளைக்கு ஆக்சிஜன் செல்வது தடைபடும்.

இரும்பு சத்து குறைவினால் அதாவது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் உடல் சேர்வடைந்து விடுகிறது. மேலும் பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஏற்படும் உதிர இழப்பால் எலும்புகள் பலமிழக்கின்றன. ரத்தத்தில் பித்தம் அதிகரித்து ரத்தம் சீர்கேடு அடைந்து தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி மயக்கம் ஏற்படுகின்றது. மேலும் கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற உதிரப் போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் ரத்த சோகை அதாவது அனீமியா ஏற்படுகிறது.உணவுப் பற்றாக்குறை காரணமாக வளரும் நாடுகளில் இருப்பவர்கள் தான் இந்த குறைப்பாட்டால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். என்றாலும்

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இருப்பவர்களும் பாதிக்கப்படவே செய்கிறார்கள். ரத்த சோகை ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், ரத்தம் அதிக அளவில் வெளியேறிக் கொண்டே இருப்பது விபத்து தவிர, இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

காரணங்கள்:

ரத்த சிவப்பணுக்கள் தொடக்கம் சீராக இல்லாத நிலையில் ரத்த சோகை உண்டாகும். வலுவற்ற, பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜையினாலும் ரத்த சோகை உண்டாகும். ரத்த சிவப்பணுக்கள் இறந்து போவதால் ரத்த சோகை ஏற்படும். ரத்தம் அதிகம் வெளியேறுவதால், ரத்தம் மாறுபடுதல், வயிற்றில் அல்சர், வயிற்றில் கட்டி, வயிற்றில் வீக்கம், வயிற்றிலோ, குடலிலோ ஏற்படும் புற்று நோய் காரணமாக சில சமயம் தொடர்ந்து ரத்தம் உள்ளே கசியும், வீக்கத்தைக் குறைக்கும் மருத்துகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அவை காலப்போக்கில் வயிற்றில் ரத்த கசிவை ஏற்படுத்தலாம்.

குழந்தையின் பிறப்பின் போது ஏற்படும் ரத்த இழப்பு போன்ற காரணங்களால் ரத்த சோகை பெண்களுக்கு ஏற்படுகிறது. மேலும் இவர்கள் குழந்தை பேறுக்குப்பின் உடல் பலம் இழப்பதால், கை, கால் மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் வலி ஏற்படுகிறது.மேலும், இயற்கை உபாதைகளை பெண் குழந்தைகள் அடக்குவதால் மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறு ஏற்பட வாய்ப்பாகிறது. இதனால் ஈரல் பாதிக்கப்பட்டு பித்தம் அதிகரித்து ரத்தத்தில் கலந்து உடலை நோய் எதிர்ப்பு சக்தியின்றி ஆக்கு கிறது.

அறிகுறிகள்:

மயக்கம் அல்லது காரணமில்லாத சோர்வு, சிறிது உணவு சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்து விட்டது போன்ற உணர்வு, உணவு செரிமானமாகாமல் இருத்தல், உடல் வெளுத்து காணப்படல், முகத்தில் வீக்கம் உண்டாகுதல், நகங்களில் குழி விழுதல், குழந்தைககளுக்கு கண் குவளைகள் மற்றும் நாக்கு வெளுத்து இருத்தல், உடல் நலம் சரியில்லாதது போன்ற உணர்வு, மூச்சு விடுவதில் சிரமம், இதயம் வேகமாகத் துடிப்பது அல்லது தாறுமாறாகத் துடிப்பது, குளிர்ச்சியான சூழலைத் தாங்க முடியாமை.

இதெல்லாம் போக தலைவலி, நாக்கு உலர்ந்து, போவது, சுவையுணர்வு பாதிக்கப்படுவது, முழுங்கச் சிரமமாக இருப்பது, உடல் வெளுத்துப் போவது, வாயின் ஓரங்களில் புண் ஏற்படுவது, அதிகம் வியர்ப்பது, கால்களை ஆட்டிக் கொண்டே இருப்பது, கை கால்களில் வீக்கம், வாந்தி போன்ற அறிகுறிகள் சிலருக்கு அரிதாக ஏற்படும்.

சாதாரணமாக ஒரு ரத்த சிவப்பணு 110-120 நாட்கள் வரை உயிரோடு இருக்கும். அதற்கு பிறகு சிதைந்து விடும். ஆனால் சில நோய்களின் காரணமாக ரத்த சிவப்பணுக்கள் மிகச் சீக்கிரமாகவே இறந்து விடும். அப்படி நடக்கும் போது எலும்பு மஜ்ஜைகள் அதிக ரத்த செல்களை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அப்படி எலும்பு மஜ்ஜைகளால் அந்த அளவுக்கு ரத்த செல்களை உருவாக்க முடியா விட்டால் ஹீமலோலிசிஸ் என்ற ரத்த சோகை ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் குறைபாடு, நோய் தொற்று சில மருந்துகள், நச்சுப் பொருள்கள் ஆகியவற்றால் ஹீமமோசிலிஸ் ஏற்படலாம்.

கர்ப்பிணிகள்:

கர்ப்பமான பெண்களுக்கு ரத்த சோகை இருந்தால் பிரசவத்தின் போதும், அதற்கு பிறகும் பல சிக்கல்கள் ஏற்படலாம், பிரசவத்தின் போது பொதுவாகவே அதிக ரத்த இழப்பு ஏற்படும். ஏற்கனவே ரத்த சோகை நோய் இருந்தால், ரத்த இழப்பு உயிருக்கே ஆபத்தாக முடியும்.

தாய்க்கு ரத்த சோகை இருந்தால் குழந்தை குறை பிரசவத்திலும், குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பிருக்கிறது. அந்த குழந்தைகளுக்கும் ரத்த சோகை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.ஆரோக்கியமானவர்களைவிட, ரத்த சோகையுடன் கூடியவர்கள் நோயில் சிக்கும் வாய்ப்பு அதிகம்.

ரத்த சோகையின் காரணமாக ரத்தத்தில் எடுத்து செல்லப்படும் ஆக்சிஜனின் அளவு குறைவதால் அதிக ஆக்சிஜனுக்காக இதயம் அதிகமாக ரத்தத்தை `பம்ப்' செய்ய வேண்டியிருக்கும். இது தொடரும் பட்சத்தில் இதயம் செயலிழக்கக் கூடும். ரத்த சோகையின் காரணமாக வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்படும். இதனால் நரம்புகள் சேதம் அடையும் வாய்ப்பு இருக்கிறது. நரம்புகளின் ஒழுங்கான செயல்பாட்டிற்கு வைட்டமின் பி 12 போதுமான அளவில் உடலில் இருப்பது அவசியம்.400 வகை ரத்த சோகை:

ஒவ்வொரு நோயும் ஒவ்வொரு காரணத்தால் ஏற்படுவது போல, ரத்த சோகையும் பல காரணங்களால் ஏற்படுகிறது. அதனால் 400 வகை ரத்த சோகைகள் உள்ளன. அவற்றில் பொதுவாக உள்ளது சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை தான். மற்றபடி வேறு பெரிய நோயால் ஏற்படும் ரத்த சோகை, ரத்தத்தில் பாரசைட் காரணமாக ஏற்படும் ரத்த சோகை, கருத்தரித்த போது ரத்த சோகை என்று பல வகையில் உள்ளன. உடல் உறுப்புகள் இயங்க அடிப்படையில் சில சத்துக்கள் தேவை. அவை உணவில் கிடைக்காவிட்டால், சத்து குறைபாடு அனிமியா ஏற்படுகிறது.

குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லாருக்கும் ரத்த சோகை வரும். ஆறு மாதம் முதல் 35 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு முழு அளவில் சத்து தேவை. அது கிடைக்காவிட்டால் ரத்த சோகை ஏற்படும். அது போல பெண்களுக்கு அதிகமாக வரும், சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு எடுத்த சர்வேயில், இந்தியாவில் 80 சதவீதம் பேருக்கு ரத்த சோகை பாதிப்பு உள்ளது. பெரும்பாலோருக்கு தங்களுக்கு இப்படி ஒரு குறைபாடு இருப்பதே தெரியாது என்று தெரியவந்துள்ளது. இந்திய பெண்களில் 56 சதவீதம் பேருக்கு உள்ளது. அதில் 58 சதவீத கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படுகிறது. பெண்களை ஒப்பிடும் போது ஆண்களுக்கு மிகக் குறைவான பாதிப்பு தான். 24 சதவீதம் பேருக்கு தான் ஏற்படுகிறது.

உணவு முறை:

நோயாளி இரும்பு சத்து இல்லாத உணவுகளை உண்ணும் பழக்க உடையவராக இருந்தால், இரும்பு சத்து அதிகம் இருக்கும் உணவுகளை அவர் சாப்பிட வேண்டும், கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள், சோயா பீன்ஸ், உலர் திராட்சை ஆகியவற்றில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது.

வலிநிவாரணி, வீக்கத்தை குறைக்கும் மருந்துகளாலும், ரத்த சோகை ஏற்படலாம் என்பதால் அவற்றிற்கான மூல காரணத்தை சரி செய்ய வேண்டும். இத்தகைய ரத்த சோகையை போக்க குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்பு சத்துள்ள கீரைகளை முருங்கைக்கீரை, அரைக் கீரை, ஆரைக்கீரை, புதினா, கொத்த மல்லி, கறிவேப்பலை, அகத்திக் கீரை, பொன்னாங் கண்ணி கீரை போன்ற கீரைகளையும், திராட்சை, பேரீட்சை, உலர்ந்த திராட்சை பப்பாளி, அத்திப் பழம், மாம்பழம், பலா பழம், சப்போட்டா ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும், கொடுத்து வருவது நல்லது. இதனால் ரத்தம் விருத்தி அடைந்து ரத்த சோகை நீங்கும்.

மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுத் தங்களி, பாதாம் பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது. பெண் குழந்தைகள் பருவ வயது வரையும் அதற்கு பின்பும் மேற்கண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை நோயை கட்டுபடுத்தலாம்.

மேற்கூறிய அனைத்து உணவுகளையும் ஒரு நாளைக்கு நம்மால் எடுத்துகொள்ளமுடியுமா என்று யோசித்து பாருங்கள் மேலும் அவை அனைத்தும் இன்றைய சூழலில் நமக்கு எளிதில் கிடைக்குமா என்றும் யோசித்து பாருங்கள். ஆனால் இவை அனைத்தும் ஒருங்கிணைந்தால் கிடைக்கும் இரும்பு சத்து அளவிற்கு இணையாக நாம் எளிதில் உட்கொள்ளும் வகையில் ரசாயன கலப்பில்லாமல் இயற்கையான முறையில் (organic Farming) தயாரிக்கபட்டு பக்க விளைவுகள் இல்லாமல் மாத்திரை வடிவில் கிடைக்கிறது. எங்கு கிடைக்கும்,எவ்வளவு உட்கொள்வது போன்ற விவரங்களுக்கு கீழ்கண்ட கைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.

ekmravi@gmail.com, sbrjothi@gmail.com
+91 99624 73975 / +91 9884 777 813

No comments:

Post a Comment