Monday, March 28, 2011

குழந்தைகளின் இன்றைய ஆரோக்கியம், நாளைய நல்வாழ்வு......


ஹாய் வணக்கம்.
  இன்றைய சூழலில் நாம் அனைவரும் உறவுகளை மறந்து, நண்பர்களை மறந்து மனதை ஒருநிலைபடுத்தி ஒரே ஒரு காரணத்திற்காக ஓடி ஓடி உழைக்கிறோம்.

      எதற்காக? பணம் சம்பாதிக்க.சம்பாதிக்கும் அந்த பணம் எதற்காக?நாமும் நம் சந்ததியினரும் வளமாகவும் நலமாகவும் வாழத்தானே? ஆனால் நாம் நம் சந்ததியினருக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை தருகிறோமா? சற்று சிந்தித்து பாருங்கள்.Health is Wealth இது இன்று நம்மிடம் வாயளவில் மட்டும் தான் உள்ளது.

      குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றி நாம் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் கவலை இருக்கும். நாம் நல்ல சத்தான உணவுகளைத்தான் தருகிறோமா?
     இல்லை நாம் தரும் உணவுகளில் அவர்களுக்கு தேவையான உயிர்சத்துக்களும்,தாது சத்துகளும் மற்றும் புரதசத்துகளும் சம அளவில் இருக்கிறதா என்று நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. மேலும் இன்றைய சூழலில் நமக்கு கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தும் இயற்கை முறையில் விளைவிக்கப்படுகிறதா என்றால் நம்மில் பலருக்கு இதற்கான விடை கிடைப்பதில்லை. ஏனென்றால் நமக்கு அதைப்பற்றி தெரியவும் தெரியாது. என்னைக் கேட்டால் இல்லையென்று அடித்து சொல்வேன்.எனக்கு தெரிந்த வரையில் இன்று கிடைக்கும் அனைத்து பழஙகளும், காய்கறிகளும் இயற்கை உரமிட்டு வளர்க்கப்படுவதில்லை.  வியாபார நோக்கில் அதிக பணம் சம்பாதிக்க அனைத்தும் ரசாயன உரமிட்டு குறுகிய காலத்தில் விளைவிக்கபட்டு அதிக விளைச்சலை பெருகிறார்கள். அதனால் இயற்கையாக நமக்கு கிடைக்க வேண்டிய அரிய சத்துக்களும், கனிமங்களும் அழிந்துவிடுகின்றன.அதனால் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய தேவையான சத்துக்களும், கனிமங்களும் கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் பலவிதமான உபாதைகளுக்கு உள்ளாகிறார்கள். அதனால் நாமும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.நமது இந்தியாவில் 10% குழந்தைகள் தான் தேவையான உயிர்சத்துக்களும்,தாது சத்துகளும் மற்றும் புரதசத்துகளும் சம அளவில் உட்கொள்கிறார்கள் மற்றும் அவ்வாறுள்ள குழந்தைகள் தான் நல்ல ஆரோகியத்துடன் இருக்கிறார்கள் என்றும் மற்றும் 50% of Pre-School childrens suffer from nutritional anaemia & Iron Deficiency என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இரும்பு சத்து குறைப்பாட்டால் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவதுடன் பள்ளிப்பாடங்களை படித்தாலும் கூட வெகு விரைவில் அவர்கள் மறந்து விடுகிறார்கள். மேலும் 2025 -ல் இதய சம்மந்தப்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டோர் இந்தியாவில் தான் அதிக அளவில் இருப்பார்கள் என்று ஒரு புள்ளி விவரம் கொடுத்டுள்ளது உலக சுகாதார மையம். அதுவும் 15-35 வயது உள்ளவர்கள் கூட இந்த மாதிரியான நோய்களால் பதிக்கப்படக்கூடும் என்றும் கூறியுள்ளனர்.நாம் நமது குழந்தைகளுக்கு 4 முதல் 11 வயது வரை எந்த அளவிற்கு ஆரோக்கியமான வாழ்வை அளிக்கிறோமோ அதை கொண்டு தான் அவர்களின் 12 வயதுக்கு பிறகு உள்ள அவர்களின் மொத்த வாழ்க்கை ஆரோக்கியமானதாக அமையும் என்று Centers for Disease Control and Preventing (CDC) (http://www.cdc.govஇந்த அமெரிக்க மையம் கூறியுள்ளது. இதற்கு முன் ஊதாரணமாக நம்முடைய பெரியோர்கள் அன்றே சொல்லி வைத்தார்கள், ”விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்று.

      நாம் எடுக்கும் உணவிற்கு ஒரு அளவு நிர்ணயம் செய்துள்ளார்கள். அதாவது RDA (recommended Daily Allowance) இந்த அளவு எடுக்கும்போது, குழந்தையின் உடல் ஒரளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருக்கும்.

இது தான் RDA அளவு.....


     மேலும் ஆரோகியமான உடல் வேண்டுமெனில் அதற்கான அளவு கோல் தான் RDI (Recommende Daily Intake or Reference Daily Intake). நாம் ஒரு நாளைக்கு குழந்தைக்கு எவ்வளவு சத்தான உணவு கொடுக்கிறோம் என்பதை பொருத்து இருக்கும்.RDA என்பது நமது குழந்தைகள் தேர்வில் 40 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுவதாகும், அதே 90 மதிப்பெண் எடுக்கும் குழந்தையும் தேர்ச்சி பெற்றதாகதான் அர்த்தம். ஆனால் இந்த இரண்டு பெருக்கும் வித்தியாசம் உண்டு என்பதை நீஙக்ள் ஒப்புகொண்டு தான் ஆக வேண்டும்.அதே போல தான் RDA க்கும் RDI க்கும் உள்ள வித்தியாசம்.இந்த RDI அளவுப்படி நாம் ஊட்டச்சத்துக்களை குழந்தைகளைக்கு கொடுத்தோமானால், அவர்கள் நல்ல திறமைசாலிகளாகவும், புத்திசாலிகளாகவும், பலசாலிகளாகவும் இருப்பர்கள். மேலும் அவர்களுடைய எதிர்காலம் மிக சிறப்பாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்றே கூறலாம். குழந்தைகளின் மூளை வளர்ச்சி( இந்த மூளை வளர்ச்சி நாம் தாயின் கருவரையில் நாம் உருப்பெரும் முன்னரே வரையறுக்கப்படுகிறது  இதற்கும் ஆதாரம் உண்டு) மற்றும் எலும்புகளின் உறுதி ஆகியவற்றுக்கு நாம் இந்த குறிப்பிட்ட வயதில் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்க வேண்டும். மேலும் அவர்களின் IQ மற்றும் EQ வளர்ச்சிக்கு இரும்புச்சத்து மிக மிக அவசியம்.மேலும் கால்சியம் மற்றும் மெக்னீசியமும் போன்ற தாதுக்களும் இந்த குறிப்பிட்ட வயதில் அவர்களுக்கு தேவையான அளவில் கிடைத்தால், உடலில் தசைகள் சுருங்கி விரியும் தன்மைக்கு இந்த கால்சியமும் மெக்னீசியமும் மிகவும் முக்கியமானது. அதனால் அவர்களின் இதயம் நன்கு சீராக இயங்கும்.அவர்களின் எதிர்காலம் மிக நன்றாக இருக்கும்.This is base foundation for future life of our childerns. மேலும் விட்டமின் சி மிகவும் இன்றியமையாத ஒரு உயிர்ச்சத்தாகும்.  இது தான் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கவல்லது.

         உங்களுக்குத் தெரியுமா? சுயஆளுமைத் தன்மையுள்ள குழந்தையால்தான் புதிய முயற்சிகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடிகின்றது; சமுதாயத்தில் எல்லோருடனும் வலுவான நட்புடன் உறவாட முடிகின்றது. பள்ளி வாழ்வும், நண்பர்களும் உங்கள் குழந்தையின் சுய மதிப்பீட்டைக் குறைக்கலாம். மனம் தளராதீர்கள்! எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையில்; பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பதில்தான்

      ஆகையால் இப்பொழுது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று சற்று சிந்தித்து பாருங்கள்.நாம் நமது குழந்தைகளுக்கு எந்த மாதிரியான வாழ்க்கை முறையை கொடுக்க போகிறோம் என்று.எந்த ஒரு பெற்றோர் தங்களின் குழந்தைக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை தருகிறார்களோ அவர்களே சிறந்த பெற்றோர்கள்.என்ன தான் நாம் பணம் காசு சொத்து சேர்த்து வைத்தாலும் ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கையால் அதை அனுபவிக்க முடியுமா?  அதனால் தான் நமது முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று....சற்றே சிந்தித்து செயல்படுங்கள்.

    இவை அனைத்தும் நம்மால் அவர்களுக்கு தரவல்லதுதான். அவர்களுக்கு தேவையான உயிர்சத்துக்களும்,தாது சத்துகளும் மற்றும் புரதசத்துகளும் சம அளவில் கிடைக்க கூடியதுதான் அதுவும் இயற்கையான முறையில் துளி கூட ரசாயண கலவை இல்லாமல் இயற்கையின் நறுமணத்தோடும் இயற்கையில் கிடைக்கும் சத்து குறையாமலும் கிடைக்கும்.ஆனால் எப்படி எங்கிருந்து கிடைக்கும் என்றுதானே தெரியவில்லை.

    உதாரணத்துக்கு சில உயிர்ச்சத்துக்களின் பயண்பாட்டை இங்கே கொடுத்துள்ளேன்

Vitamin D - Increases the absorption of Calcium in the body
Vitamin C & E -  Anti-oxidant
Iron - Carrier of Oxygen to the entire body especially to brain
Folic Acid - Food for the Nerve System even before birth of a baby


நிறைய பேருக்கு இந்த விஷயங்கள் சரியாக சென்று சேர்வதில்லை. அதனால் தான் உங்கள் கவனித்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

       மேலும் உயிர்ச்சத்துக்கள், தாதுச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் பற்றி மேலும் விவரம் அறிய கீழ்கண்ட இணையதள முகவரியை பாருங்கள் நமது குழந்தையின் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு கொள்ளுங்கள்....
http://www.cdc.gov/nutrition/everyone/index.html

     இரும்புச்சத்து மற்றும் கால்ஸியம் சத்துக்கள் பற்றியும் அவற்றின் குறைபாடுகள் பற்றியும் மேலும் விவரம் அறிய கீழ்கண்ட இணையதள முகவரியை பாருங்கள்....
http://www.cdc.gov/nutrition/everyone/basics/vitamins/index.html

       இத்துடன் ஒரு குழந்தை சராசரியாக எவ்வளவு உணவு உட்கொள்ள வேண்டுமென்று ஒரு அட்டவணையை இணைத்துள்ளேன் பாருங்கள். அவ்வளவும் நம்மால் கொடுக்க முடியுமா, அப்படியே கொடுக்க முடிந்தாலும் நமது குழந்தைகள் உட்கொள்ளுமா என்று யோசித்துப் பாருங்கள்......
       மேற்கண்ட அட்டவணையில் இருப்பது கடின உணவு முறை(Hard diet), இதையே நாம் எளிய முறையிலும் உட்கொள்ளலாம். மேற்கூறிய உயிர்ச்சத்துக்களும், தாது சத்துக்களும் மற்றும் புரதசத்துக்களும் சம அளவில் சாப்பிட நமக்கு எளிய வழி (Soft Diet) உள்ளது..... 

        அந்த எளிய வழி என்ன என்று அறிய வேண்டுமா?????
கீழ்கண்ட கைபேசி மற்றும் மின்னஞ்சலை தொடர்பு கொள்ளுங்கள்......

ekmravi@gmail.com, sbrjothi@gmail.com
9962473975, 9884777813.

2 comments:

 1. வாழ்த்துகள்.
  அருமையான, மிகவும் அவசியமான ஒரு விஷயத்தைப் பற்றி எழுதியுள்ளீர்கள்.
  பிறந்தவுடனே, ஏன் பிறக்கும் முன்பிருந்தே சிசுவின் உணவு/சத்துத் தேவைகளை அனைவரும் அறிந்து, காலத்தே உட்கொண்டால், இனி வரும் ஒவ்வொரு குழந்தையும் எந்தக் குறைபாடும் இன்றி, சாதனையாளராக விளங்கும்.

  சத்துக்களை இயற்கையான முறையில், வேதிப்பொருள்களின் மாசுக் கலப்பில்லாமல் பெற ஆர்கானிக் ஃபார்மிங் மூலம் பயிரிடப்பட்ட காய்,கனிகளை உட்கொண்டால் நாம் பெற முடியும்: ஆனால், இவை மிகவும் விலை உயர்ந்தவை.

  நல்ல கட்டுரை.
  இரண்டு மூன்று பத்திகளுக்கு ஒன்றிரண்டாக படங்கள் ஏதேனும் சேர்க்கலாம்.(குறிப்பிட்ட சத்துப் பொருள்கள் அடங்கின காய், கனி, அல்லது உணவுவகைகள் இப்படி ஏதாவது..)படிப்பவர்களுக்கு சுவாரசியமாகவும் இருக்கும். மனதிலும் மிக எளிதாகப் பதியும்.

  தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 2. மிக்க நன்றி பிரகாஷ் அவர்களே, நாம் நமது குழந்தைகளின் ஆரோகியம் விலைமதிபில்லாதது இல்லையா? ஆகையால் அவர்களின் ஆரோக்கியத்தை விலை பேச வேண்டாமே.....

  ReplyDelete